இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 3,000 இற்கும் மேற்பட்ட சாரதி அனுமதிப் பத்திரங்கள் நீதிமன்றங்களால் தற்காலிகமாக இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தலிலிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் அதன் பணிப்பாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவிக்கையில்,
சாரதிகள் செய்த பல்வேறு குற்றங்களுக்காக நீதிமன்றங்களால் முன்னெடுக்கப்பட்ட வழக்கு விசாரணைகளுக்கு அமைவாக, குறித்த சாரதி அனுமதிப்பத்திரங்கள் தற்காலிகமாக இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த இதேவேளை, அடிக்கடி வீதி விபத்துக்கள் இடம்பெறுவதற்கு கவனக்குறைவாக வாகனங்களை செலுத்துவதும், வாகனங்கள் சரியான தரத்தில் இல்லாததுமே பிரதான காரணம் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் சமூகவியல் பிரிவின் பேராசிரியர் மொஹமட் மஹீஷ் தெரிவித்துள்ளார்.
எனவே, வாகனத்தை இயக்குவதற்கு முன்னர் அதன் தரத்தை பரிசோதிப்பது இன்றியமையாதது என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் நாட்டின் வீதி அமைப்பில் காணப்படும் குறைபாடுகளும் வீதி விபத்துக்கள் அதிகரிப்பதற்கு காரணமாக அமைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.