தலைமன்னார் தொடருந்து பாதையில் தொடருந்து சேவைகள் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக பிரதி பொது முகாமையாளர் எம்.ஜே.இண்டிபோலகே ( M.J. Indipolage) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இதுவரை, மாஹோ மற்றும் அநுராதபுரம் தொடருந்து பாதைகளுக்கு இடையில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டம் காரணமாக, தலைமன்னார் தொடருந்து பாதையின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டிருந்ததாகவும் அவர் அறிவித்துள்ளார்.
அத்துடன் நாளை கொழும்பு கோட்டையில் இருந்து தலைமன்னார் நோக்கி தொடருந்து பயணிக்கவுள்ளது.
இதன்படி தொடருந்து எண் 5003, கொழும்பு கோட்டையிலிருந்து மாலை 4:15 மணிக்கு புறப்படும். மற்றும் இரவு 10:15 மணிக்கு தலைமன்னார் சென்றடையும்.
இதேநேரம் தொடருந்து இலக்கம் 5004, நாளை 13ஆம் திகதியன்று, தலைமன்னாரிலிருந்து அதிகாலை 4:15 மணிக்குப் புறப்பட்டு, முற்பகல் 10:15 மணிக்கு கொழும்பு கோட்டையை வந்தடையும்எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.