வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நேற்று (23) மன்னாரில் மழை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்டதுடன், அவர்களுக்கு அவசர உதவியாக உலர் உணவுப் பொதிகளையும் வழங்கினார்.
மன்னார் மாவட்டத்தில் நேற்று (23) இரவு வரை பெய்த கடும் மழையினால் 2045 குடும்பங்களைச் சேர்ந்த 7778 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
ரணிலுக்கு எதிராக ரவி கருணாநாயக்க கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்
இந்நிலையில் மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பல்வேறு கிராமங்கள் வெள்ள நீரில் மூழ்கி மக்கள் பல்வேறு இடர்களை எதிர்கொண்டு தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.