தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் விஜய் தேவரகொண்டா. இவர் நடிப்பில் கடைசியாக தி பேமிலி ஸ்டார் எனும் படம் வெளிவந்து, தோல்வியடைந்துள்ளது.
குறித்த இதேவேளை விஜய் தேவரகொண்டா தற்போது சஹிபா என்கிற இந்தி ஆல்பம் பாடலில் நடித்துள்ளார். இதற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இவர், தன்னுடைய காதல் வாழ்க்கை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
அதில் "எனக்கு 35 வயது ஆகிறது. நான் சிங்கிளாக இருப்பேன் என நினைக்கிறீர்களா? என நகைச்சுவையாக பேசினார். பின், "என்னுடன் நடித்த சக நகையை நான் டேட் செய்துள்ளேன்" என ஒப்புக்கொண்டார்.
மேலும், "எனக்கு காதலிக்கப்படுவது எப்படிப்பட்ட உணர்வு என்று தெரியும், எனக்கு காதல் என்றால் என்னவென்றும் புரியும். எனது காதல் அக்கண்டிஷலான காதல் கிடையாது. என்னுடைய காதல் சில கண்டிஷன்களுடன் தான் இருக்கும்" என அவர் கூறியுள்ளார்.
நடிகர் விஜய் தேவரகொண்டா பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனாவை காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டு வருவதை நாம் அறிவோம். இந்த நிலையில், இவர் தனது சக நடிகையுடன் டேட்டிங் செய்திருக்கிறேன் என கூறியுள்ள விஷயம், வைரலாக பேசப்பட்டு வருகிறது.