டிரம்பின் வெற்றியால் ஒரே நாளில் எலான் மஸ்கின் சொத்து மதிப்பு அதிகரிப்பு!

tubetamil
0

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளதால் உலக பெரும் பணக்காரரான எலான் மஸ்கின் சொத்து மதிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



இது குறித்து மேலும் தெரிய வருவதாவது, டிரம்ப் முன்னிலை பெற்றதுமே டெஸ்லா நிறுவன பங்குகள் விலை உயரத்தொடங்கின. இதனால் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு ஒரே நாளில் ரூ.2.19 லட்சம் கோடி (26.5 பில்லியன் டொலர்) உயர்ந்துள்ளது.


அத்துடன் டிரம்பின் வெற்றியால் எலான் மஸ்க் மட்டும் ஆதாயம் அடைந்ததில்லை. அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ், உலகின் இரண்டாவது பணக்காரர், அவரது சொத்து மதிப்பும் அதிகரித்துள்ளது. 


டிரம்பிற்கு ஆதரவாக பிரசாரம் செய்தது மட்டும் இன்றி பிரசாரத்துக்கு 375 கோடி ரூபாய் அளவுக்கு நிதியும் வழங்கினார். 



நான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் எலான் மஸ்க்கிற்கு மந்திரி பதவி அல்லது வெள்ளை மாளிகையில் ஆலோசகர் பதவி கொடுப்பேன் டிரம்ப் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top