யாழ். சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குழிப் பகுதியில் தொடருந்து மோதியதால் உத்தியோகத்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்பவமானது, நேற்று (07) காலை இடம்பெற்றுள்ளது.
இதன்போது, நாவற்குழி தொடருந்து நிலையத்தை அண்மித்துள்ள பாதுகாப்பற்ற தொடருந்து கடவை ஒன்றைக் கடக்க முற்பட்டபோதே தொடருந்து மோதி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
உள்ளூராட்சி சபையொன்றில் பணிபுரியும் 52 வயதான நபரே காலையில் பணிக்குச் செல்லும்போது இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.