குறுகிய காலத்தில் இலங்கை அணிக்கு ஆலோசக பயிற்சியாளரான தென்னாபிரிக்க வீரர்!

tubetamil
0

தென்னாபிரிக்க  கிரிக்கட் அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் நீல் மெக்கன்சி , குறுகிய காலத்திற்கு  இலங்கை தேசிய கிரிக்கட் அணியின் ஆலோசகர் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.



அதனடிப்படை யில் தென்னாபிரிக்காவுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக, நேற்றிரவு தென்னாபிரிக்காவிற்கு புறப்பட்ட இலங்கை வீரர்கள் குழுவுடன் அவர் இணைந்து பணியாற்றவுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதனடிப்படையில் தென்னாபிரிக்க கள நிலைமைகள் பற்றிய முக்கியமான, ஆழமான நுண்ணறிவுகளை மெக்கென்சி இலங்கை வீரர்களுக்கு வழங்குவார் என்று இலங்கை கிரிக்கெட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஏஸ்லி டி சில்வா கூறியுள்ளார்.


அத்துடன் நீல் மெக்கன்சி, தென்னாப்பிரிக்காவுக்காக 5,000 சர்வதேச ஓட்டங்களை அனைத்து வடிவங்களிலும் எடுத்த முன்னாள் தென்னாபிரிக்க துடுப்பாட்ட வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் அவர் 2024 நவம்பர் 13 முதல் 21 வரை இலங்கை வீரர்களுடன் இணைந்து பணியாற்றவுள்ளார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top