அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நேற்று நடைபெற்று முடிந்த நிலையில் அதன் முடிவுகள் தற்போது வெளியாகி கொண்டிருக்கின்றன.
இந்த தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளர்களான டொனால்ட் ட்ரம்ப் மற்றும் கமலா ஹாரிஸிற்கு இடையில் கடும் போட்டி நிலவுகிறது.
இதுவரை வெளியான முடிவுகளின் அடிப்படையில் டொனால்ட் ட்ரம்ப் முன்னிலை வகிக்கிறார்.
அதற்கமைய ட்ரம்ப் 210 இடங்களையும் கமலா ஹாரிஸ் 113 இடங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
இதேவேளை நாடளாவிய ரீதியில் மொத்தம் உள்ள 50 மாகாணங்களில் 538 தேர்வுக்குழு உறுப்பினர்கள் உள்ளனர். அவரில் 270 பேரின் ஆதரவை பெறும் வேட்பாளர் அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படவுள்ளார்.
பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், 16 கோடிக்கும் மேற்பட்டவர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். அவர்களில் 7 கோடிக்கும் அதிகமானோர் ஏற்கனவே வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.