கிளிநொச்சி - கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தர்மபுரம் பகுதியில் உள்ள தாழ் நிலபகுதியில் இருப்பவர்கள் இவ்வாறு பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
வெள்ளம் வீட்டை சூழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ள மக்கள் பெய்த கடும் மழை காரணமாக மக்கள் குடியிருப்பு பகுதியில் உள் நுழைந்த முதலை ஒன்று சில கோழிகளை வேட்டையாடியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
வீட்டுக்குள் நுழையாதவாறு வேலியில் கட்டப்பட்டிருந்த வலையில் சிக்குண்ட நிலையில் முதலை காணப்படுகின்றது.
இந்த நிலையில் மக்கள் அச்சம் வெளியிடுகின்றனர்.