பிக்பாஸ் சீசன் 6 ல் ரன்னராக வந்த விக்ரமனுக்கு தமிழ் சினிமாவில் உதவி இயக்குநராக இயங்கி வரும் ப்ரீத்தி கரிகாலன் என்பவருடன் நேற்று சென்னையில் திருமணம் நடந்து முடிந்திருக்கிறது.
குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் நடந்த இந்தத் திருமணம் நடைபெற்றது.
இது குறித்து பேசிய விக்ரமன் "’’ப்ரீத்தி,பார்த்திபன் சார்கிட்ட உதவி இயக்குநரா இருக்காங்க. ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’, ’கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ ஆகிய படங்கள்ல ஒர்க் பண்ணியிருக்காங்க. சில ஆண்டுகளுக்கு முன்னாடியே நாங்க பரஸ்பரம் அறிமுகமானதுல இருந்தே எங்க ரெண்டு பேருக்குமிடையில் நல்லதொரு புரிதல் இருந்ததை எங்களால உணர முடிஞ்சது. நண்பர்களா சில காலம் பழகினோம். பிறகு அது காதலா மாறி இப்ப கல்யாணத்துல முடிஞ்சிருக்கு.
நாங்க சேர்ந்து வாழலாம்னு முடிவு செய்த போதே வீட்டு சம்மதம் முக்கியம்கிறதுல தெளிவா இருந்தோம்.. அதனால ரெண்டு பேருமே வீட்டுல பேசினோம். பிரீத்தி முன்னால் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் குமரி ஆனந்தனுக்கு பேத்தி முறையில சொந்தம். எங்க ரெண்டு தரப்புலயும் பெரியவங்க சம்மதிக்க, அவங்க ஆசிர்வாதத்துடனேயே கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு ரிசார்ட்ல கல்யாணம் நடந்தது.
தாலி கட்டிக்கணும்னு பிரீத்தி விருப்பப் பட்டதால அவங்க விருப்பத்துக்காக பெரியவங்க சுயமரியாதை முறைப்படி தாலி எடுத்துக் கொடுக்க அதை நான் அவங்க கழுத்தில் கட்டினேன். பிறகு கிறிஸ்தவ முறைப்படி மோதிரமும் மாத்திகிட்டோம்.
கல்யாணத்துல இயக்குநர்கள் சீனு ராமசாமி, கருபழனியப்பன் என்னுடைய பிக்பாஸ் நன்பர்கள் ரச்சிதா, ஷிவின் ஆகிய சிலர் கலந்துகிட்டாங்க, மற்ற எல்லாருக்காகவும் வரவேற்பு நடத்தற ஐடியாவும் இருக்கு. அதுபத்தி சீக்கிரமே சொல்றேன்’ என தெரிவித்துள்ளார்.