மன்னாரில் சர்ச்சைக்குரிய தாய் மற்றும் குழந்தை மரணம்; நீதி பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் ரவிகரன் எம்.பி. உறுதி

tubetamil
0

 மன்னார் பொது வைத்தியசாலையில் மகப்பேற்றுக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்த தாய் மற்றும் சிசு விவகாரம் தொடர்பில் நீதியைப் பெற்றுக்கொடுக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். 



மன்னார் - பட்டித்தோட்டம் பகுதியில் அமைந்துள்ள பாதிக்கப்பட்டவர்களின் வீட்டிற்கு நேற்றையதினம் (24) சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குத் தனது அனுதாபங்களைத் தெரிவித்ததுடன், இடம்பெற்ற துயரச்சம்பவம் தொடர்பான விடயங்களைக் கேட்டறிந்துகொண்டார். 



அத்தோடு மன்னார் மாவட்ட செயலாளருக்கு தொலைபேசியில் தொடர்பை ஏற்படுத்தி இந்த விடயத்தின் நிலைதொடர்பிலும் கேட்டறிந்ததுடன், இந்த விடயத்தில் கூடுதல் கவனஞ்செலுத்தப்பட்டு நீதியைப்பெற்றுத்தர உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இதன்போது தெரிவித்திருந்தார். 



இதன்போது இலங்கைத்தமிழரசுக்கட்சியின் வன்னிமாவட்ட நாடாளுமன்ற வேட்பாளராக போட்டியிட்ட செ.டினேசனும் நாடாளுமன்ற உறுப்பினருடன் இணைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.







Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top