இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கு முன்பாக E-8 விசாக சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள சத்தியாகிரகப் போராட்டம் இன்று இரண்டாவது நாளாக தொடர்கிறது
E-8 விசா வைத்திருக்கும் போதிலும் தென் கொரியாவிற்கு செல்ல முடியாத நிலையில், தீர்வைக் கோரி ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
E-8 விசா குறுகிய கால வேலைக்காக தென் கொரியாவுக்குச் செல்ல அனுமதிக்கிறது, பொதுவாக ஆறு மாதங்களுக்கு, விவசாயம் மற்றும் மீன்பிடித் துறைகளில் எட்டு மாதங்கள் வரை வேலை செய்ய வாய்ப்பு உள்ளது.
தென் கொரியாவின் வாண்டோவில் வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தைப் பெற்ற 107 இலங்கையர்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்யத் தவறியதால் சிக்கித் தவிக்கின்றனர்.
விசா அனுமதியின் போது ஏற்பட்ட தொழில்நுட்ப பிழையே அனுமதி வழங்காததற்கு காரணம் என பணியகம் குறிப்பிட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு விசாரணைக்காக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், உண்மைகள் நாளை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் மேலதிக பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்தார்