நடிகை கஸ்தூரி முன் ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவித்ததால் நடிகை கஸ்தூரியின் ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
மேலும் கஸ்தூரி தலைமறைவாக இருக்கும் நிலையில், அவர் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தெலுங்கு பேசும் மக்கள் மீது குறித்து அவதூறு பேசியதாக கஸ்தூரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
பிராமணர்களைப் பாதுகாக்க ஒரு புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில், சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடந்த 3 ஆம் தேதி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற நடிகை கஸ்தூரி, தெலுங்கு பேசும் மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளமை குறிப்பிடத்தக்கது.