நாக சைதன்யா- சோபிதா திருமண நிகழ்வுகள் ஆரம்பம்! முதலாம் நாளில் ஹல்தி விழா நடைபெற்றது!

tubetamil
0


 நாக சைதன்யாவுக்கும் சோபிதா துலிபாலாவுக்கும் டிசம்பர் 4ஆம் தேதி திருமணம் நடக்கவிருக்கிறது. 


 அன்னபூர்ணா ஸ்டூடியோஸில் அவரது தாத்தாவான நாகேஸ்வர ராவ் சிலைக்கு முன்பு இத்திருமணம் நடக்கிறது.


அத்துடன் இந்தச் சூழலில் இருவருக்குமான திருமண விழா இன்று முதல் ஆரம்பித்திருக்கிறது. 


அது தொடர்பான புகைப்படங்களும்  புகைப்படங்களும் ட்ரெண்டாகியிருக்கின்றன.


நிச்சயதார்த்தம் முடிந்ததை அடுத்து சைதன்யாவும், சோபிதாவும் பொது நிகழ்ச்சிகளில் ஜோடியாக கலந்துகொண்டார்கள். மேலும் கடந்த தீபாவளியைக்கூட இரண்டு பேரும் சேர்ந்து கொண்டாடினார்கள். சூழல் இப்படி இருக்க இருவருக்கும் திருமணம் எப்போது நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருந்தது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக டிசம்பர் மாதம் நான்காம் திகதி நடைபெறவுள்ளது.



திருமணத்துக்கு இன்னும் நான்கு நாட்களே இருக்கும் நிலையில் திருமண விழா இன்று முதல் தொடங்கியிருக்கிறது. அதன்படி முதலில் ஹல்தி விழா இன்று நடந்தது. அதில் குடும்ப உறுப்பினர்கள் கலந்துகொண்டு மணமக்களுக்கு மஞ்சள் தண்ணீர் ஊற்றி வாழ்த்தினர். அதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. இதனைப் பார்த்த ரசிகர்கள் நாக சைதன்யாவுக்கும், சோபிதா துலிபாலாவுக்கும் தங்களது வாழ்த்தினை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top