புங்குடுதீவு பல்நோக்கு கூட்டுறவு சங்கத்தில் 53 இலட்சம் ரூபா நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரிய வருவதாவது, குறித்த பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் கீழ் ஆறு பணியாளர்கள் பணிபுரிவதோடு, அந்த சங்கத்தின் கீழ் ஒரு எரிபொருள் நிரப்பு நிலையம் இயங்கி வருகிநிறமாய் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் 13 மாதங்களுக்குள் 53 இலட்சம் ரூபா நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த அமைப்பினால் ஆவணங்கள் சரியான முறையில் பேணப்படாத நிலையில் இந்த நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.