பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட உரிமம் பெற்ற துப்பாக்கிகளை மீள ஒப்படைப்பதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக்க தெரிய வந்துள்ளது.
அதனடிப்படையில் நவம்பர் 21 ஆம் திகதிக்கு முன்னர் துப்பாக்கிகளை ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த இதேவேளை துப்பாக்கிகளை மீள கையளிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சு ஒரு மாத கால அவகாசம் வழங்கியதுடன் அந்த காலம் இன்றுடன் நிறைவடையவிருந்தது.
எனினும் , முன்வைக்கப்பட்ட உண்மைகளை கருத்திற்கொண்டு, காலத்தை நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக உரிமம் வழங்கப்பட்ட துப்பாக்கிகளை பரிசீலனை செய்த பின்னர், மீள வழங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சு அறிவித்தது.
அதனடிப்படையில், வெலிசர கடற்படை முகாமில் துப்பாக்கிகளை ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சு அறிவித்தல் விடுத்துள்ளது.