அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

tubetamil
0

 அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலையை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளதாக்க தெரிவித்துள்ளது.


இந்த விலை குறைப்பானது  இன்று (2) முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் பாசிப் பயறு ஒரு கிலோ கிராமின் விலை 51 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 799 ரூபாவாகும்.

மேலும், வெள்ளை கௌபி ஒரு கிலோ கிராமின் விலை 20 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலையாக 880 ரூபா அறிவிக்கப்பட்டுள்ளது.


அத்துடன், வெள்ளை சீனியின் ஒரு கிலோ கிராமின் விலை 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய 243 ரூபாவாகும்.


மேலும், அனைத்து சதொச அங்காடிகளிலும் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தை 300 ரூபாவிற்கு பெற்றுக்கொள்ள முடியும் எநாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.










Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top