76 ஆண்டுகளாக அழிக்கப்பட்ட இந்த நாட்டை ஒரு வருடத்திலேனும் மீட்டெடுக்க முடியாது என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமன்த வித்தியாரட்ன தெரிவித்துள்ளார்.
நாட்டை கட்டியெழுப்பும் நடவடிக்கை அரசாங்கத்தினால் மட்டும் செய்யக்கூடிய விடயமல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் வெற்றியின் பின்னர் மக்களுக்கு நன்றி பாராட்டும் நிகழ்வில் பங்கேற்ற போது அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
பாரியளவிலான மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.