பொதுத் தேர்தலுக்காகப் பிரதான கட்சி ஒன்றின் சார்பில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் வாக்காளர்களின் நீர் மற்றும் மின் கட்டணங்களை செலுத்தியமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட தேர்தல் முரண்பாடுகளைக் கையாளும் பிரிவு தெரிவித்துள்ளது.
மூதூர் - தோப்பூர் பிரதேசத்திலுள்ள மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த வீடேயாம் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவை தெளிவுபடுத்தியுள்ளதாகத் திருகோணமலை மாவட்ட தேர்தல் முரண்பாடுகளைக் கையாளும் பிரிவின் உதவி தெரிவத்தாட்சி அதிகாரி எஸ். சுதாகரன் தெரிவித்துள்ளார்.