தமிழரசு கட்சிக்கு இருப்பை தக்க அரசுடன் இணைய வேண்டும் - கம்மன்பில தெரிவிப்பு

tubetamil
0

 வடமாகாணத்தில் தமது கட்சிக்கான ஆதரவு வீழ்ச்சியடைந்து வருவதால் அரசுடன் இணைந்து அதனைத் தக்கவைத்துக்கொள்வதற்குரிய தேவைப்பாடு இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு ஏற்பட்டுள்ளதாக பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.



குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் 


“மங்கள சமரவீரவுக்கும், சுமந்திரனுக்கும் நல்லுறவு இருந்தது. மங்கள ஜனாதிபதியாகி இருந்தால் சுமந்திரன் நிச்சயம் அமைச்சுப் பதவியை ஏற்றிருப்பார்.


இன்று மங்கள உயிருடன் இல்லை. அடுத்தது சுமந்திரனுக்கும், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இடையில் சிறந்த நட்பு உள்ளது. இருவரும் ருவரும் இணைந்து செயற்படக்கூடியவர்கள்.



1960 காலத்துக்குப் பின்னர் அவர்கள் அரசில் அங்கம் வகிக்காததால் வடக்கில் அவர்களுக்குரிய வாக்கு வங்கி வீழ்ச்சியடைந்து வருகின்றது.


தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 2015 இல் 16 ஆசனங்கள் கிடைக்கப் பெற்றன. 2020இல் அந்த எண்ணிக்கை 10 ஆகக் குறைந்தது. எனவே, அவர்களின் இருப்பு வீழ்ச்சியடைந்து வருகின்றது.


எனவே, அரச பலம் மூலம் அதனைத் தக்கவைத்துக்கொள்வதற்குரிய தேவைப்பாடு அவர்களுக்கு உள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top