ஜனாதிபதியாக பதவி ஏற்றுக்கொள்வதற்கு முன்னதாக அநுரகுமார திஸாநாயக்க வழங்கிய எந்தவொரு வாக்குறுதியும் இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை என நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மாத்தறையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டமொன்றிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பெரும்பான்மையான அரச ஊழியர்களின் வாக்குகளை பெற்றுக்கொண்ட அரசாங்கம் அவர்களை மறந்துவிட்டதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக இரண்டு வழக்குகளை தொடர்வதற்கு சட்டத்தரணிகள் உள்ளிட்ட சிலர் முயற்சித்த போதிலும் தாம் அதனை தடுத்ததாக தெரிவித்துள்ளார்.
மிகவும் சிறுபான்மையைக் கொண்ட பிரதமர் ஒருவரை நியமித்தமை மற்றும் தேர்தல் தினம் தொடர்பில் இவ்வாறு வழக்குத் தொடரப்படவிருந்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.