கேரளாவில் காங்கிரஸ் வெற்றி; எம்.பி-யாக களம் இறங்கியா பிரியங்கா காந்தி!

tubetamil
0

கேரளா வயநாடு தொகுதி மக்களவை உறுப்பினரான பிரியங்கா காந்தி இன்று  எம்.பி-யாக பதவியேற்றுள்ளார்.



உத்தர பிரதேசத்தின் ரேபரேலி மற்றும் வயநாடு ஆகிய இரு மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்ட ராகுல் காந்தி, இரண்டிலும் வெற்றி பெற்றார். இதன் மூலம் காங்கிரசின் கோட்டையான ரேபரேலி தொகுதியைத் தக்கவைத்த அவர், வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்ததால், அத்தொகுதிக்கு இடைத்தோ்தல் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.


கேரளாவில் தனது செல்வாக்கினை தக்க வைத்து கொள்வதற்கு ராகுல் காந்தியின் சகோதரியும் கட்சியின் பொதுச் செயலருமான பிரியங்கா காந்தியை அக்கட்சி களமிறக்கியது. இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சத்யன் மொகேரி, பாஜகவின் நவ்யா ஹரிதாஸ் உள்பட 16 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, நான்கு லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top