மசாஜ் செய்வதாக கூறி வைத்தியர் ஒருவரை ஏமாற்றி கத்தியை காட்டி மிரட்டி 10 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையிட்டுச் சென்ற சம்பவம் தொடர்பில் பெண் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
இதனையடுத்து வைத்தியர் தொடர்மாடி குடியிருப்பின் அறை ஒன்றிற்கு கடந்த 8 ஆம் திகதி அன்று சென்றுள்ளார்.
அறையில் மறைந்திருந்த சந்தேக நபர்கள் சிலர் வைத்தியரை தாக்கி நிர்வாணமாக்கி அதனை காணொளியாக எடுத்து கத்தியை காட்டி மிரட்டி வைத்தியரின் வங்கி கணக்கிலிருந்து 10 இலட்சம் ரூபா பணத்தை மற்றுமொரு வங்கி கணக்கிற்கு வைப்பு செய்துள்ளனர்.
சந்தேக நபர்கள் வைத்தியரின் பணப்பையில் இருந்த 15,000 ரூபா பணத்தையும் கொள்ளையிட்டு சென்றுள்ளனர். வைத்தியர் இது தொடர்பில் பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் முச்சக்கர வண்டியுடன் கடந்த 8ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 44 மற்றும் 54 வயதான பிலியந்தலை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் ஆவார். சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ஏனைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 19, 21, 22 மற்றும் 23 வயதுடைய இரத்மலானை பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர். மேலும் சம்பவம் தொடர்பில் பம்பலப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.