ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி ஆகியோர் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ள அமரன் திரைப்படம் சிவகார்த்திகேயனின் திரைப்பயணத்தில் எப்போதும் மறக்கவே முடியாத ஒரு அழகான படமாக அமைந்துள்ளது.
வீரமரணமடைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கை பயணத்தை வைத்து இப்படம் உருவாகியுள்ளது.
இந்த திரைப்படமானது தமிழகத்தை தாண்டி இப்படத்திற்கு இலங்கையிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
அதனடிப்படையில் அமரன் திரைப்படம் இலங்கையில் ரூ.6.2 கோடி (இலங்கை மதிப்பில்)
வரை வசூல் செய்துள்ளது.