கங்குவா திரைப்படத்தில் நடிகர் கார்த்தி கிளைமாக்ஸில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. இது குறித்து பல இடங்களில் இயக்குனர் சிவா மற்றும் நடிகர் சூர்யா சூசகமாக சில விஷயங்களை வெளியிட்டு இருந்தனர்.
ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்க திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இதில் சிறப்பு தோற்றத்தில் ண்டடிக்கும் கார்த்தி தனது சினிமா பயணத்தில் இதுவரை செய்யாத விஷயத்தை அதாவது புகைப்பிடிப்பதை அவர் இந்த படத்திற்காக செய்துள்ளதாக கூறப்படுகிறது.