இந்தியா (India) மற்றும் தென்னாபிரிக்கா அணிகள் (South Africa) பங்கேற்ற முதல் 20க்கு 20 போட்டியில், இந்தியாவின் தேசிய கீதம் ஒலிக்கப்பட்ட போது, தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக ஒலிபெருக்கி பாதியில் தடைப்பட்டுள்ளது.
இதனால் அங்கு அசௌகரிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
எனினும் இந்திய வீரர்கள் தாங்களாகவே தேசிய கீதத்தை பாடி முடித்தனர். இந்தநிலையில், அவர்கள் பாடி முடித்தவுடன் இந்திய தேசிய கீதம் மீண்டும் ஒலிபரப்பானதால் மைதானத்தில் இயல்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி நாணய சுழற்சியில் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன் பின் இரண்டு அணி வீரர்களும் வரிசையாக நின்றனர்.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவின் தேசிய கீதங்கள் ஒளிபரப்பப்பட்டன. இதன்போது இந்தியாவின் தேசிய கீதம் ஒளிபரப்பப்பட்ட வேளை ஒலிபெருக்கி பாதியில் தடைப்பட்டது
தொழில்நுட்ப கோளாறு காரணமாக இப்படி நடந்து இருக்கலாம் என்பதை ஊகித்த இந்திய வீரர்கள், அந்த சூழ்நிலையை சமாளித்து தேசிய கீதத்தை சத்தமாக பாடி முடித்தனர்.
மைதானத்தில் இருந்த இந்திய ரசிகர்களும் ஒரே நேரத்தில் தேசிய கீதத்தை சத்தமாக பாடினர்.அது நெகிழ்ச்சி அளிக்கும் விடயமாகவும் அமைந்தது.