அரசாங்கத்தின் பிரதான நோக்கமாக இருப்பது இந்த கிராமிய மட்ட, மற்றும் நகர மட்டத்தில் இருக்கின்ற வறுமையை ஒளிப்பதாகும். அது எமது பிரதான சவாலாகும் என ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று 10 ஆவது நாடாளுமன்றத்தின் முதலவாது அமர்வு இடம்பெற்றது. இதன்போது இடம்பெற்ற கொள்கை பிரகடன உரையின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
எமது பிரதான சவால் வறுமையை ஒளிப்பது. இந்த வறுமையை ஒழிப்பதற்கு நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்லாயிரம் வருடங்கள் நாங்கள் வாழப்போவது இல்லை. 70, 80 வருடங்கள் வாழுகின்ற பிரஜைகள் நாங்கள். ஒவ்வொரு பிரஜைக்கும் நியாமான வகையில் உணவு, கல்வி, வாழ்வதற்கான வீடு, வருமான மட்டம் மற்றும் உள ரீதியான திருப்தி அவர்களுக்கு இருக்க வேண்டும்.
எனவே இந்த அரசாங்கத்தின் பிரதான நோக்கமாக இருப்பது இந்த கிராமிய மட்ட, மற்றும் நகர மட்டத்தில் இருக்கின்ற வறுமையை ஒளிப்பதாகும். இந்த வறுமையை ஒழிப்பதற்காக எதிர்வரும் வரவுசெலவுத்திட்டத்தில் தற்பொழுது வளங்கப்படுகின்ற அஸ்வெசும கொடுப்பனவை நியாமான முறையில் அதிகரிக்க நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.
அதே போல் பாடசாலை நூல்களை கொள்வனவு செய்வதற்காக கஷ்டத்தில் இருக்கின்ற குடும்பங்களுக்காக அடுத்த புதிய வருடத்தின் ஆரம்பத்தில் பாடசாலைகளுக்கு செல்கின்ற பிள்ளைகளுக்காக பாடசாலை உபகரணங்கள், புத்தகங்களை கொள்வனவு செய்ய கொடுப்பனவு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதே போல இன்றளவில் நாங்கள் ஓய்வு பெற்றோரது கொடுப்பனவை ஒக்டோபர் மாதத்திலிருந்து 3000 இனால் அதிகரித்திருக்கின்றோம். அதனை நாங்கள் வரவு செலவுத்திட்டத்தில் நாங்கள் நியாமான சம்பள அதிகரிப்பையும் நாங்கள் அரச ஊழியர்களுக்கு வழங்க எதிர்பார்த்திருக்கின்றோம்.
அதே போல் எமது நாட்டில் 5 வயதுக்கு குறைந்த பிள்ளைகளின் போசாக்கின்மை பிரைச்சனையும் நிலவுகின்றது. அந்த பிரச்சினையும் நாங்கள் அறிவோம். இது சுகாதார பிரச்சினை மாத்திரமல்ல. அது எதிர்காலத்தில் ஒரு சமூக பிரச்சனையை எடுக்க கூடியது. செயற் திறனற்ற குழந்தைகள் சமூகத்துடன் ஒன்றிணைய முடியாத குழந்தைகளாக மாற்றப்படலாம். இதற்கு வறுமை ஒரு காரணமாக அமைகின்றது. எனவே 5 வயதுக்கு குறைந்த பிள்ளைகளின் போசாக்கின்மையை ஒழிப்பதற்கான வேலைத்திட்டம் அவசியம். எனவே அப்படிப்பட்ட பிள்ளைகள் இருக்கும் குடும்பங்களுக்கு கொடுப்பனவை வழங்க ஒரு வேலைத்திட்டத்தை வழங்க நாங்கள் தயாராக இருக்கின்றோம்.
அதே போல் கர்ப்பிணி தாய்மாருக்கு அவர்கள் வயிற்றில் குழந்தை சுமந்த பிறகு அவர்கள் பல நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கின்றார்கள். கர்ப்பிணி தாய்மார்களை பாதுகாப்பதற்கான போசாக்கு திட்டத்தை நாங்கள் நடைமுறைப்படுத்த இருக்கின்றோம்.
அதனை விடுத்து தற்போது இருக்கின்ற இந்த வறுமையை ஒளித்து பொருட்கள் சேவைகளை பெறக்கூடிய சூழலை உருவாக்க இருக்கின்றோம். அது தொடர்ச்சியாக நீண்ட காலமாக அரசாங்கத்தினால் செய்யக்கூடிய செயல்பாடு அல்ல. எந்த ஒரு அரசாங்கத்திலும் எந்த ஒரு சூழலிலும் பொருளாதாரத்தில் இருந்து ஒதுக்கப்பட்ட மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். பொருளாதார தொடர்பே இல்லாத மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். அபிவிருத்தி அடைந்த நாடுகளிலும் அப்படிப்பட்ட மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். அப்படிப்பட்ட மக்களை அல்லது அந்த சமூகத்தினை பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமையாகும். என அவர் தெரிவித்துள்ளார்.