ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கார்த்திகை தீபம் சீரியல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த சீரியலில் லீட்ரோலில் செம்பருத்தி சீரியலில் நடித்த கார்த்திக் ராஜ் மற்றும் அர்த்திகா நடித்து வருகின்றனர்.
இதில் நடிகை அர்த்திகா அதிரடியாக நீக்கப்பட்டமை குறித்து அவர் நெகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.
சீரியலில் இருந்து நீக்கப்பட்டது குறித்து பேசி உள்ளார். அதில், கார்த்திகை தீபம் தான் என் முதல் சீரியல் இதில் மக்கள் என்னை கொண்டாடினார்கள் அதை நினைக்கும் போது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கு. இந்த சீரியலில், தீபா மற்றும் கீதா என்று இரண்டு விதமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறேன். நடித்தேன் என்று சொல்வதைவிட வாழ்ந்து இருக்கிறேன் என்று தான் சொல்ல வேண்டும்.
இந்த சீரியல் இப்போது முடிய போகிறது, அடுத்து கார்த்திகை தீபம் சீசன் 2 வரவிருக்கிறது. இந்த சீரியலில் இருந்து என்னை நீக்கிவிட்டார்கள். அதற்கு காரணம் எனக்கு அண்மையில் தான் கல்யாணம் ஆச்சு, இதனால், என்னால நெருக்கமான காட்சிகளில் நடிக்க முடியல, இதையெல்லாம் பார்த்துவிட்டு என்னை சீரியலில் இருந்து திட்டம் போட்டு தூக்கிவிட்டார்கள். இதுல நான் யாரையும் குறை சொல்லவிரும்பவில்லை. இதுனால் வரை எனக்கு ஆதரவு அளித்த என் தமிழ் ரசிகர்களுக்கு நன்றி, எனக்கு தொடர்ந்து ஆதரவு கொடுங்கள் என்று அர்த்திகா அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.
குறித்த இதே வேளை கார்த்திகை தீபம் சீரியல் இந்த வாரத்தோடு முடிக்கப்பட்டு அடுத்த வாரத்தில் இருந்து கார்த்திகை தீபம் சீசன் 2 தொடங்க உள்ளது. இதன் ப்ரோமோ அண்மையில் வெளியானது.
இதில், கார்த்திக் கிராமத்து கெட்டப்பில் வேட்டி, சண்டையில் இருக்கிறார். அவருக்கு ஜோடியாக புது நடிகை ஒருவர் கமிட்டாகி உள்ளார். கார்த்திகை தீபம் சீசன் 2 நடித்த ஒரு சில கதாபாத்திரங்கள் இருக்கும் நிலையில், நடிகை அர்த்திகா அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. கார்த்திக் மற்றும் அர்த்திகா ஜோடி தான் பொருத்தமாக இருக்கிறது என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்