வாகன இறக்குமதிக்கான முதல் கட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (06) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மூன்று கட்டங்களாக வாகன இறக்குமதியை மேற்கொள்ளவுள்ளவுள்ளது எனவும் சுற்றுலாத் துறைக்கு தேவையான வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் வாகன இறக்குமதியாளர்களுடன் இதுதொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தியிருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.