வடக்கு, கிழக்கில் கனமழை: 'பெங்கால்' புயல் தாக்கும் அபாயம்!

tubetamil
0

  தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது உருவாகியுள்ள நிலையில்  இது இன்று இரவு அல்லது நாளை காலை புயலாக மாறும் என  யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை தலைவர் நா.பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.



குறித்த விடயம் தொடர்பில் அவர் அவர் மேலும் தெரிவிக்கையில், 

”இப்புயலுக்கு பெங்கால் (Fengal) என பெயரிடப்படும்.


வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு தற்போது கிடைத்து வரும் கனமழை இன்னமும் அதிகரிக்கும். ஏற்கனவே குறிப்பிட்டது போன்று இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மந்தமான வேகத்தில் நகர்வதால் இதன் பாதிப்புக்கள் எதிர்பார்த்ததை விட கூடுதலாக இருக்கும்.என அவர் தெரிவித்துள்ளார்.


அத்துடன் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு தற்போது கிடைக்கும் மிக கன மழை தொடரும். திருகோணமலை , மட்டக்களப்பு, முல்லைத்தீவு, கிளிநொச்சி ,மன்னார் மாவட்டத்திற்கும் கனமழை தொடரும்.


மேலும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் தாழ்வான பகுதிகள், குளங்களின் கீழுள்ள பகுதிகள், ஆற்று வடிநிலங்களுக்கு அண்மித்த பல பகுதிகளுக்கும் வெள்ள அனர்த்தத்துக்கான வாய்ப்புக்கள் உண்டு.


பல குளங்கள் வான் பாயத் தொடங்கியுள்ளதோடு, கன மழையும் கிடைத்து வருகின்றது.


ஆகவே வெள்ள அனர்த்தத்துக்கான வாய்ப்புக்கள் அதிகரித்துக் கொண்டு வருகிறது என்பதனைக் கருத்தில் கொள்ளுங்கள்.


வடக்கு மாகாணத்தில் இன்று இரவு முதல் காற்றின் வேகம் அதிகரிக்கும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கடற்பகுதிகள் மிக மிக கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் கடற்றொழிலாளர்கள் எக்காரணம் கொண்டும் கடலுக்கு செல்வதை தவிர்ப்பது சிறந்தது.


கரையோரங்களில் நிறுத்தப்பட்டுள்ள படகுகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள்.


இந்த புயலின் பாதிப்புக்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்ககூடும் என்பதனால்  உங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்“ எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top