தற்போதைய ஜனாதிபதி அனுரா குமார திஸாநாயக்க தமிழ் , மற்றும் முஸ்லீம் மக்கள் உட்பட எல்லா மக்களையும் பாதுகாப்பார் என நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதுர்தீன் தெரிவித்துள்ளார்.
புத்தளம் மாவட்டத்தில் இடமேற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி ஆதரவாளர்களிடையே இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அனுரகுமார திஸானாயக்காவை நம்பி அதிகமான மக்கள் தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் வாக்களித்திருக்கிறார்கள் இனமத பேதங்களுக்கு அப்பால் வாகித்திருக்கிறார்கள்.
அவர்கள் முஸ்லிம் வேட்பாளர்களை நம்பி வாக்களிக்கவில்லை அனுரகுமாரவை நம்பித்தான் வாக்களித்திருக்கிறார்கள். எனவே எல்லாச் சமூகமத்தையும் பாதுகாப்பார் என்று நம்புகிறோம்.
என்று பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதுர்தீன் அவர்கள் தெரிவித்தார்.