அஸ்வெசும நலன்புரி திட்டத்திற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கூடுதல் அவகாசம் மீண்டும் ஒருமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் நலன்புரி நன்மைகள் சபை விடுத்த அறிவித்தலிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையை கருத்திற்கொண்டு இந்த காலவகாசம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நிவாரணத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட அவகாசத்தை எதிர்வரும் 12 ஆம் மாதம் 09 ஆம் திகதி வரை நீட்டிக்க நலன்புரி நன்மைகள் சபை தீர்மானித்துள்ளது.
குறித்த இதேவேளை முன்னர் கடந்த 25 ஆம் திகதி முதல் எதிர்வரும் 02 ஆம் திகதி வரை
அத்துடன் அஸ்வெசும நிவாரண பயனாளிகள் திட்டத்திற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இதுவரை அஸ்வெசும நிவாரண பயனாளிகள் திட்டத்திற்கு விண்ணப்பிக்காத குடும்பங்கள் மற்றும் நபர்கள் உரிய காலத்திற்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.