தமிழரசுக்கட்சியினை வடக்கிலும் நாங்கள் கட்டியெழுப்ப தயாராகயிருக்கின்றோம்.எங்களை அழைத்தால் அங்கு சென்று வடமாகாணத்திலும் தமிழரசுக்கட்சியை கட்டியெழுப்பவதற்கு தயாராகயிருக்கின்றேன் என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முதலைக்குடா,முனைக்காடு பகுதியில் மக்களினால் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.முதலைக்குடாவில் உள்ள ஆலயங்கள்,கிராம அமைப்புகள், விளையாட்டுக்கழகங்கள் இணைந்து இந்த வரவேற்பினை வழங்கியது.இதேபோன்று முனைக்காடு பகுதியிலும் ஆலயங்கள்,கிராம அமைப்புகள், விளையாட்டுக்கழகங்கள் இணைந்து மாபெரும் வரவேற்பினை பாராளுமன்ற உறுப்பினருக்கு வழங்கியது.இதன்போது உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்,
பொறுப்பினை தந்தால் தமிழரசுக்கட்சியை மட்டக்களப்பு மாவட்டத்தில் கட்டியெழுப்பியதுபோன்று ஏனைய மாவட்டங்களிலும் கட்டியெழுப்ப தயாராகயிருக்கின்றேன் எனவும் அவர் தெரிவித்தார்.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் வடகிழக்கில் அதிகூடிய விருப்பு வாக்கினைப்பெற்று வெற்றிபெற்ற பாராளுமன்ற உறுப்பினராக கருதப்படும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அவர்களுக்கு வரவேற்பளித்து கௌரவிக்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.