ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சரிகமப சீசன் 4 நிகழ்ச்சியில் தற்போது டூயட் சுற்றில் போட்டியாளர்கள் பாடல் பாடி அசத்தி வருகின்றனர். இதில் போட்டியாளர் புவனேஷ் பாடிய பாடல் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
26 போட்டியாளர்கள் பங்குபற்றியா இந்த போட்டியில் இதில் ஒவ்வொரு குழந்தைகளும் அவரவர்களின் சிறப்பான திறமைகளை காட்டி வருகின்றனர்.
தற்போது ஆரம்பிக்கப்பட்டிருப்பது ரூயட் சுற்று என்பதால் இருவர் இருவராக பாடல்களை பாடுவார்கள். அந்த வகையில் புவனேஷ் மற்றும் மஹதி சேர்ந்து பாடல் பாடி அசத்தியுள்ளனர்.
இதில் புவனேஸ் நடுவர் ஸ்வேதா மோகனுக்கு ரோஜா மழை பொழியச் செய்தது அரங்கத்தில் இருந்த அனைவரையும் ஈர்க்க செய்தது.
தற்போது நடைபெற்றுவரும் சரிகமப சீசன் 4 வின் லிட்டில் சாம்பியன்ஸ் மிகவும் சுவாரஸ்யமாக சென்றுகொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.