வியட்நாமில் நடைபெற்ற இந்த ஆண்டுக்கான மிஸ்டர் வேர்ல்ட் 2024 போட்டியில் இலங்கையின் மேக்கா சூரியராச்சி மக்கள்தேர்வு விருதினை தட்டி சென்றுள்ளார்.
அத்துடன் இலங்கையின் கலாசாரத்தை பெருமை மற்றும் நேர்த்தியுடன் வெளிப்படுத்தும் “தேசிய ஆடை மக்கள் தெரிவு” விருதையம் அவர் வென்றுள்ளதுடன் மிஸ்டர் வேர்ல்ட் போட்டியில் முதல் 10 இடங்களை எட்டிய முதல் இலங்கையர் என்ற வரலாற்றையும் மேக்கா சூரியராச்சி படைத்துள்ளார்.
இலங்கையின் செழுமையான பாரம்பரியத்தை தனது உடையின் மூலம் சூரியராச்சி வெளிப்படுத்தியதாகவும்,. அவரது ஆடை நாட்டின் கலாசாரத்தை வெளிப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் உலகளாவிய பார்வையாளர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.