பதுளை - எல்ல பிரதேசத்திற்கு வருகை வருகைத்தந்த இத்தாலிய(Italy) பிரஜை ஒருவர், அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு முன்பாக சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கபோனேரி எண்ட்ரியா(Caponeri Andrea) என்ற 49 வயதுடைய இத்தாலிய பிரஜையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
நகரில் உள்ள சுற்றுலா விடுதியில் தங்கியிருந்த அவர், எல்ல பிரதேசத்திற்கு விஜயம் செய்ததாகவும், பின்னர், இன்று(06.11.2024) அதிகாலை 04:30 மணியளவில் ஹோட்டலுக்கு முன்னால் மயங்கி விழுந்ததில் உயிரிழந்திருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டள்ளனர்.
இது தொடர்பில் பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் முறைப்பாடு செய்ததன் பின்னர் உயிரிழந்தவரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக பதுளை போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை எல்ல பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
`