யாழில் பெய்த கடும் மழை அனர்த்தம் காரணமாக இரண்டு குடும்பங்களை சேர்ந்த 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஜே/401 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த நால்வரும், கரவெட்டி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/356 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த ஐவருமே பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவிதித்துள்ளார்.
அத்துடன் வீட்டின் மீது மரம் முறிந்து விழுந்ததில் வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.