இலங்கையிலுள்ள தங்களது நாட்டுப் பிரஜைகளுக்கு விடுத்திருந்த பயணக் கட்டுப்பாட்டை இஸ்ரேல் தளர்த்தியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
முன்னதாக அருகம்பைப் பகுதியில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தப்படலாம் எனத் தெரிவித்து, தங்களது நாட்டுப் பிரஜைகளுக்கு இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அறிவுறுத்தல் விடுத்திருந்ததனையடுத்து இஸ்ரேலும் இலங்கையிலுள்ள தங்களது நாட்டு பிரஜைகளுக்கு பயண கட்டுப்பாட்டை விதித்திருந்தது.
இந்தநிலையில் இலங்கையில் இஸ்ரேலியர்களுக்கான அச்சுறுத்தல் மட்டத்தைக் குறைப்பதாக இஸ்ரேலிய தேசியப் பாதுகாப்புச் சபை தெரிவித்துள்ளது.