பரந்தன் முல்லைத்தீவு A35 வீதியின் சுண்டிக்குளம் சந்தியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தின் மீது வீதியில் ஓரத்தில் நின்ற மரம் வேருடன் சாய்ந்ததில் வாகனம் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், மின் இணைப்புக்களும் சேதமடைந்துள்ளது.
இதன் காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து தடை பட்டது. போக்குவரத்து பொலிசார் மற்றும் அப்பகுதி இளைஞர்கள் இணைந்து குறித்த மரத்தை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.