இலங்கை அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 தொடருக்கான நியூசிலாந்து அணி இன்று நாட்டை வந்தடைந்தது.
குறித்த இரு அணிகளும் 2 இருபதுக்கு 20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் மோதவுள்ளன.
இந்த தொடரானது எதிர்வரும் 09 ஆம் திகதி ஆரம்பமாகி 19 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன.
இந்த போட்டிகள் தம்புள்ளை மற்றும் கண்டி ஆகிய மைதானங்களில் நடைபெறவுள்ளது.