உக்ரைன் நாட்டை விட்டு உடனடியாக வெளியேறுமாறு பிரித்தானியாவின் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, பிரேசிலில் நடைபெற்ற G 20 மாநாட்டில் கலந்துகொண்ட உலக நாடுகளின் தலைவர்களிடையே உரையாற்றிய பிரித்தானிய பிரதமர் ஸ்டார்மர், மாநாட்டில் கலந்துகொள்ளாத புடினை கடுமையாக விமர்சித்தத்துடன், உக்ரைனை விட்டு வெளியேறுங்கள் என புடினை சாடியுள்ளார்.
பிரேசிலில் நடைபெற்ற G 20 மாநாட்டில் கலந்துகொண்ட உலக நாடுகளின் தலைவர்களிடையே உரையாற்றிய பிரித்தானிய பிரதமர் ஸ்டார்மர், மாநாட்டில் கலந்துகொள்ளாத புடினை கடுமையாக விமர்சித்தத்துடன், உக்ரைனை விட்டு வெளியேறுங்கள் என புடினை சாடியுள்ளார்.
இதன் போது பிரித்தானியர்கள் அணு ஆயுதப் போரை எதிர்கொள்ளத் தயாராகவேண்டுமா என ஸ்டார்மரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த ஸ்டார்மர், புடின் பொறுப்பற்ற விதத்தில் பேசிக்கொண்டிருப்பதாகவும், அவரது அச்சுறுத்தலைக் கண்டு பயந்து பிரித்தானியா உக்ரைனுக்கு வழங்கிவரும் ஆதரவிலிருந்து பின்வாங்கப்போவதில்லை என்றும் கூறியுள்ளதாக தெரிய வந்துள்ளது.