ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: முதல் சுற்றில் அல்காரஸ் அதிர்ச்சி தோல்வி..!

tubetamil
0

 ஆண்கள் டென்னிஸ் ஏ.டி.பி. இறுதிச்சுற்று சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியில் நடைபெறுகிறது.


இதன்போது  நம்பர் 3 வீரரான அலகாரஸ் முதல் சுற்றில் தோல்வி அடைந்தார்.


இந்த போட்டியானது, இத்தாலியின் துரின் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்தப் போட்டி 17-ம் தேதி வரை நடக்கிறது.


இந்தப் போட்டியில் ஒற்றையரில் தரவரிசையில் முதல் 8 இடத்தில் உள்ள வீரர்களும், இரட்டையர் பிரிவில் டாப்-8 ஜோடியினரும் கலந்து கொள்கிறார்கள்.


இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த போட்டியில் 3ம் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், 6-வது நிலை வீரரான நார்வேயின் காஸ்பர் ரூட்டுடன் மோதினார்.


இதில் அல்காரஸ் 1-6, 5-7 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top