நாமினேஷனில் இருந்தவர்களை ஒவ்வொருவராக விஜய் சேதுபதி காப்பாற்றி வந்த நிலையில், இறுதியில் அனந்தி மற்றும் சுனிதா ஆகியோர் இருந்தனர்.
இந்நிலையில் சுனிதா தான் வெளியேறினார் என விஜய் சேதுபதி கார்டை காட்டி அறிவித்தார்.
எல்லோரிடமும் விடை பெற்று வந்த சுனிதா வெளியில் சென்றார். அவருடன் நெருக்கமாக இருந்த அன்ஷிதா தான் கதறி கதறி அழுது கொண்டிருந்தார்.
வெளியில் சென்று விஜய் சேதுபதி முன்னிலையில் பேசும்போது கூட சுனிதா மற்ற போட்டியாளர்களை பற்றி குறை எதுவும் சொல்லாமல், பாசிட்டிவ் ஆக மட்டுமே பேசி வாழ்த்து கூறிவிட்டு கிளம்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.