நடிகர் அஜித் நடித்துள்ள விடா முயற்சி படத்தின் டீசர் நேற்று (28) வெளியாகியுள்ளது. இதனை அஜித்தின் ரசிகர்கள் வைரலாக்கி கொண்டாடி வருகின்றனர்.
நடிகர் அஜித் குமார் துணிவு பட வெற்றிக்கு பின்னர் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள விடாமுயற்சி திரைப்படத்தின் பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்தன. தற்போது படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் 1 நிமிடம் 49 நொடிகள் கொண்ட படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷாவும் வில்லனாக பிக்பாஸ் சீசன் 1 வின்னர் ஆரவ்வும் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது