முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள தண்ணிமுறிப்பு குளத்தின் அணைக்கட்டு உடைப்பெடுக்காத வகையில் அதனை பாதுகாக்கும் முன்னாயத்த ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றது.
தண்ணிமுறிப்பு குளத்தின் அணைக்கட்டு உள் பக்கமாக சில இடங்களில் அரிப்பு ஏற்பட்டுள்ளதையடுத்து அணைக்கட்டு, குளத்தை பாதுகாப்பதற்காக தற்காலிகமாக மண்மூடைகள் போடப்பட்டு, பாதுகாப்பு வேலி அமைக்கும் வேலைத்திட்டத்தை நீர்ப்பாசனத் திணைக்களத்தினர் இராணுவத்தினரோடு இணைந்து பாதுகாக்கும் நடவடிக்கையினை முன்னெடுத்து வருகின்றனர்.
தண்ணிமுறிப்பு குளமானது 21 அடி வரை நீரை சேமிக்க கூடியதாக இருக்கின்ற நிலையில் தற்போது 14.6" அடி வரை நீர் மட்டம் உயர்ந்த நிலையில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது