நேற்று இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பாக சார்பில் போட்டியிட்ட துரைராசா ரவிகரன் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்படட நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவு தூபிக்கு சென்றுள்ளதுடன் அங்கு இறுதி யுத்தத்தில் உயிரிழந்த மக்களை நினைவு கூர்ந்தார்.
இது குறித்து மேலும் தெரிய வருவதாவது ,
இன்று காலை 11.15.மணியளவில் நினைவு அஞ்சலியை நிகழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது .
குறித்த இதேவேளை வெற்றி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினரை முல்லைத்தீவு மக்கள் இன்று முல்லைத்தீவு நகரில் மலர்மாலை அணிவித்து வரவேற்றதுடன் பட்டாசுகள் வெடித்தும் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாகவும் தெரிய வந்துள்ளது .