வடக்கில் அரச திணைக்களம் ஒன்றில் ஊழல் முறைகேடு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!

tubetamil
0

 வடக்கு மாகாணத்தில் உள்ள அரச திணைக்களம் ஒன்றில்  ஊழல் முறைகேடு  ஒன்று இடம்பெற்று வருவதாக அண்மையில் ஊடகவியலாளர் ஒருவர் முன்வைத்த முறைப்பாடு ஒன்று தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஊழல் புலன் விசாரணை ஆணைக்குழு  விசாரணைகளை ஆரமபித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.


இது குறித்து மேலும் தெரிய வருவதாவது,


விசாரணைக்கு ஏதுவாக கொழும்பில் உள்ள இலஞ்சம் மற்றும் ஊழல் புலன் விசாரணை குழுவில் நேற்று (18) இரண்டு மணித்தியாலங்கள் குறித்த ஊடகவியலாளரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.


மேலும்,வடக்கில் பொதுமக்கள் பணத்தினை வீண்விரயம் செய்த அதிகாரிகள் தொடர்பில் தகவல் அறியும் உரிமை சட்டம் மற்றும் கணக்காய்வு அறிக்கைகள் மூலம் பெறப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு வடக்கில் உள்ள இரண்டு அமைச்சு ஒரு திணைக்களம் உட்பட நான்கு முறைப் பாடுகளை இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக் குழுவுக்கு வழங்கப்பட்டது.


அதனடிப்படையில் முதலாவது முறைப்பாடு தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு தனது விசாரணைகளை ஆரம்பிப்பதாகவும் முறைப்பாடு தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக கொழும்பு ஜாவத்தையில் உள்ள இலஞ்சம் மற்றும் ஊழல் புலன் விசாரணை ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று திங்கட்கிழமை தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் மூலமாக அழைப்பு விடுக்கப்பட்டது.


அதன் பிரகாரம்  குறித்த திணைக்களம் தொடர்பிலும் அதன் தகவல் அலுவலர் மீதும் இரண்டு மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top