அமெரிக்காவை சேர்ந்த இளைஞரான விதய் ரெட்டி என்பவர் ஒரு பட்டதாரி இளைஞர் ஆவார்
இவர் வகுப்பறையில் ஆசிரியரிடம் கேள்வி கேட்பது போன்று அந்த வாலிபர் மற்றும் சாட்பாட் இடையேயான உரையாடல் நீண்டு கொண்டே சென்றது. அப்போது இயல்பாக பதில் அளித்த சாட்பாட், திடீரென அந்த இளைஞரை திட்டி உள்ளது.
இது அந்த சாட்டின் டிரான்ஸ்கிரிப்சனில் தெரிய வந்துள்ளது. அதில்,
'அற்ப மானிடனே... உன்னைத்தான்; நீ முக்கியம் இல்லை, நீ தேவையில்லை, நீ நேரத்தை வீணடிக்கிறாய், நீ பூமிக்கு பாரமாக இருக்கிறாய், தயவு செய்து செத்து விடு' என திட்டி உள்ளது.
இந்த உரையாடலின் பிரதி தற்போது வெளியாகி விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
அத்துடன் இதுபோன்ற ஆலோசனை தனியாக உள்ள அல்லது உடல்நிலை சரியில்லாத நபருக்கு கிடைத்தால் அதன் விளைவுகள் மோசமாக இருக்கும்.
அதை நினைத்தால் எனக்கு கவலை தருகிறது என விதய் ரெட்டியின் சகோதரி கூறியுள்ளார்.