ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் கார்த்திகை தீபம் ஆகும் .
TRP ரேட்டிங்கில் டாப்பில் இருந்த இந்த சீரியலின் கதைக்களத்தை தற்போது முழுவதுமாக மாற்றியுள்ளனர்.
அத்துடன் இனி கார்த்திகை தீபம் சீரியல் கிராமத்து கதைக்களத்தில் ஒளிபரப்பாகவுள்ளது. இந்த நிலையில், கார்த்திகை தீபம் சீரியலில் தீபா எனும் கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் நடிகை அர்த்திகா. இவரை கார்த்திகை தீபம் சீரியலில் இருந்து திடீரென நீக்கிவிட்டனர்.
இதற்கான காரணத்தை அவரே தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இவர் தற்போது ஜீ தமிழில் இருந்து விஜய் டிவிக்கு வரப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கார்த்திகை தீபம் சீரியலில் கதாநாயகியாக நடித்து வந்த நடிகை அர்த்திகா, இனி விஜய் டிவியில் வரவுள்ள புதிய சீரியலில் கதாநாயகியாக நடிக்க கமிட்டாகியுள்ளார் என கூறுகின்றனர்.
விரைவில் இந்த புதிய சீரியல் விஜய் டிவியில் வரவுள்ளதாகவும் அதுகுறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.