வெள்ள அழிவுவுடன் விவசாயிகள் யானைகளால் அழிவுகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
முல்லத்தீவு மாவட்டத்தின் விசுவமாடு பகுதியில் மூன்று காட்டு யானைகள் பெரும்போக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நெத்தலியாறு பகுதிகளில் தினமும் இரவு வேளைகளில் காட்டு யானைகளில் வந்து நெச்செயகைகளை அழித்து வருவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
விவசாயிகளால் மேற்கொள்ளப்பட்ட வயல் நிலங்களை மேய்ந்து வருவதாக விவசாயிகள் கவலை வெளியிடுகின்றனர்.
தற்பொழுது வெள்ளம் மெல்ல மெல்ல வடிந்து வரும் நிலையில், யானைகள் தொடர்ச்சியாக நெற்பயிர்களை அழித்து வருகின்றது.
அப்பகுதிக்கு வெள்ளம் காரணமாக மக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு 40 நாட்கள் கடந்த நிலையில் வயல்களை மிதித்து தும்சம் செய்து வருவதுடன் அப்பயிர்களை மேய்ந்து வருவதாகவும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்நிலை ஒவ்வொரு வருடமும் தமக்கு ஏதோ ஒரு வகையில் நெற்செய்கை மேற்கொள்ளப்படும் பொழுது அழிவுகளே அதிகமாக ஏற்பட்ட வருவதாகவும் இதற்கான நஷ்ட ஈடு எமக்கு எவராலும் வழங்கப்படுவதில்லை எனவே எனவும் கவலை தெரிவித்துள்ளனர்.